ரிஷிவந்தியம் மாரியம்மன் கோவில் தேர் திருவிழா
ADDED :2575 days ago
ரிஷிவந்தியம்: சூ.பாலப்பட்டு முத்துமாரியம்மன் கோவில் தேர்திருவிழா நேற்று (செப்.,16ல்) நடந்தது.
ரிஷிவந்தியம் அடுத்த சூ.பாலப்பட்டு முத்துமாரியம்மன் கோவில் தேர்திருவிழா கடந்த 5ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து அங்காளம்மன், காத்தவராயன், ஆரிய மாலா சுவாமிகளின் பிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு, சுவாமி வீதியுலா நடந்தது.
கடந்த 14ம் தேதி, ஊரணி பொங்கல் மற்றும் பால்குட ஊர்வலம் நடந்தது. 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பால்குடம் சுமந்து ஊர்வலமாக சென்று நேர்த்தி கடன் செலுத்தினர்.
நேற்று (செப்.,16ல்) காலை 10:00 மணிக்கு காளி கோட்டை இடித்தல் நிகழ்ச்சியை தொடர்ந்து தேர்திருவிழா நடந்தது. சுற்று வட்டார பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து ஊர்வலமாக இழுத்து சென்றனர்.