திண்டிவனம் விநாயகர் சதுர்த்தி தேரோட்டம்
ADDED :2575 days ago
திண்டிவனம்: சர்கார்தோப்பு சுந்தரமூர்த்தி விநாயகர் கோவிலில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, தேரோட்டம் நடந்தது.
திண்டிவனம் சர்கார்தோப்பு சுந்தரமூர்த்தி விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா நடந்தது. அதனையொட்டி 13ம் தேதி மகா அபிஷேகம், சந்தனகாப்பு மற்றும் ஊஞ்சல் உற்சவம் நடந்தது. 14ம் தேதி விநாயகருக்கு பூணூல் அணிவிக்கப்பட்டது. நேற்று முன்தினம் செப்., 15ல் விநாயகர் அலங்கரிக்கப்பட்ட தேரில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.