உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோவிந்தம்பாளையம், தெற்கு வீதி, மாரியம்மன் கோவிலில் பால்குட ஊர்வலம்

கோவிந்தம்பாளையம், தெற்கு வீதி, மாரியம்மன் கோவிலில் பால்குட ஊர்வலம்

தலைவாசல்: புரட்டாசி தொடங்குவதை முன்னிட்டு, தலைவாசல், கோவிந்தம்பாளையம், தெற்கு வீதி, மாரியம்மன் கோவிலில், நேற்று (செப்., 16ல்) காலை, பால்குட ஊர்வலம் நடந்தது. முக்கிய வீதிகள் வழியாக வந்த ஊர்வலம், கோவிலில் நிறைவடைந்தது. தொடர்ந்து, அம்மனுக்கு பூஜை செய்து, தீபாராதனை காட்டப்பட்டது. மாலை, சிறப்பு அலங்காரத்தில், அம்மன் வீதியுலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !