உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மாமல்லபுரம் மாவட்டத்தின் கடலில் விநாயகர் சிலைகள் கரைப்பு

மாமல்லபுரம் மாவட்டத்தின் கடலில் விநாயகர் சிலைகள் கரைப்பு

மாமல்லபுரம்:மாவட்டத்தின் பல இடங்களில் வைக்கப்பட்ட விநாயகர் சிலைகள், மாமல்ல புரம் உள்ளிட்ட நீர்நிலை பகுதிகளில், கடலில் கரைக்கப்பட்டன.

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, காஞ்சிபுரம் மாவட்டத்தில், இந்து முன்னணி உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர், 13ம் தேதி, பொது இடங்களில், விநாயகர் சிலை அமைத்து வழிபட்டனர்.

நேற்று முன்தினம் 15ம் தேதி,, பிற அமைப்பினரின் குறைவான சிலைகள், மாமல்லபுரம் கடலில் கரைக்கப்பட்டன; இந்து முன்னணி அமைப்பின் சிலைகள், நேற்று (செப்.,16ல்) கரைக்கப்பட்டன.

காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருக்கழுக்குன்றம் உள்ளிட்ட பகுதிகளின் சிலைகள், பல்வேறு வாகனங்களில், மாமல்லபுரம் கடற்கரைக்கு, நேற்று (செப்., 16ல்) காலையிலிருந்து கொண்டு வரப்பட்டன.

விநாயகர் சிலை வைப்பது, கரைப்பது தொடர்பாக, அரசு விதித்த கட்டுப்பாடுகாரணமாக, சிலையுடன் வந்தவர்களை, போலீசார் கட்டுப்படுத்தி, சிலரை மட்டுமே அனுமதித்தனர்.

கடற்கரையில், போலீசார் அமைத்த டிராலியில், சிலையை ஏற்றி, கடலுக்கு கொண்டு சென்று, போலீஸ் ஏற்பாடு செய்த ஆட்கள், கடலில் மூழ்கடித்தனர். 300க்கும் மேற்பட்ட சிலைகள் கரைக்கப்பட்டன.

செங்கல்பட்டு நகரில் வைக்கப்பட்ட, 200க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் ஊர்வலம், ஜி.எஸ்.டி., சாலை மற்றும் திருக்கழுக்குன்றம் ரயில்வே மேம்பாலம் வழியாக, மாமல்லபுரம் கடலுக்கு சென்றது. அங்கு, சிலைகள் கடலில் கரைக்கப்பட்டன

வண்டலூரில், பூஜிக்கப்பட்ட விநாயகர் சிலைகள், கோவளம், மாமல்லபுரம், நீலாங்கரை நீர்நிலை பகுதிகளில் கரைக்கப்பட்டன திருக்கழுக்குன்றம் மற்றம் திருப்போரூர் பகுதிகளில் வைக்கப்பட்ட விநாயகர் சிலைகள், கடலில் கரைக்க, டிராக்டர் உள்ளிட்ட வாகனங்களில், நேற்று செப்.,16ல், ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !