மேலும் செய்திகள்
உலக நன்மைக்காக மகா சண்டி ஹோமம்
2573 days ago
பாலுார் லட்சுமி நாராயணபெருமாள் கோவிலில் தேரோட்டம்
2573 days ago
திருப்போரூர்:அனுமந்தபுரம் அகோர வீரபத்ரர் கோவிலில், ஐந்துநிலை ராஜகோபுரம்அமைக்கும் பணி, தீவிரமாக நடக்கிறது.
திருப்போரூர் தாலுகாவில், சிறப்பு பெற்ற சிவஸ்தலமாக, அனுமந்தபுரம் அகோர வீரபத்ரர் கோவில் உள்ளது.அறநிலையத் துறை அனுமதியுடன் உபயதாரர்கள், 70 லட்சம் ரூபாய்
மதிப்பில், கோவிலில் ஐந்து நிலை ராஜகோபுரம் கட்டும் பணியை, கடந்தாண்டு துவக்கினர்.
தற்போது, 65 சதவீத பணிகள் முடிந்து, ராஜகோபுரம் முகப்பில், சுதை சிற்பங்கள் பதிக்கும் பணி நடக்கிறது.அடுத்தாண்டு துவக்கத்தில், குடமுழுக்கு நடத்துவதற்கு ஏற்ப, முழுவீச்சில் பணிகள் நடக்கின்றன.இத்திருப்பணியில் பங்கேற்க விரும்புவோர், கோவில் செயல்அலுவலர் பெயரில் வங்கி வரைவோலை, காசோலை வழங்கலாம் என, கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
2573 days ago
2573 days ago