காரைக்குடியில் குன்றக்குடி ஆலய விழா
ADDED :2573 days ago
காரைக்குடி: குன்றக்குடி ஆரோக்கிய அன்னை ஆலய விழா கடந்த 14-ம் தேதி கொடியேற்றத் துடன் தொடங்கியது. பாதிரியார் எட்வின்ராயன் கொடியை ஏற்றி வைத்தார்.
மறுநாள்15ம் தேதி மாலை திருவிழா திருப்பலி பாதிரியார்கள் ஒனாசியஸ் பிரபாகரன், சிவகங்கை மறை மாவட்ட குடும்ப நல வாழ்வு பணிக்குழு செயலர் ஆரோக்கியராஜ் தலைமையில் நடந்தது.
தொடர்ந்து அன்னையின் சொரூபம் அர்ச்சிக்கப்பட்டு, அலங்கரிக்கப்பட்ட சப்பர ஊர்வலம் நடந்தது.கிராம கமிட்டி தலைவர் சேவியர் வரவேற்றார். நேற்று முன்தினம் திருப்பலி முடிந்ததும் கொடியிறக்கும் நிகழ்ச்சி நடந்தது.