உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தொண்டாமுத்தூர் அரங்கநாதர் கோவிலில் புரட்டாசி சிறப்பு பூஜை

தொண்டாமுத்தூர் அரங்கநாதர் கோவிலில் புரட்டாசி சிறப்பு பூஜை

தொண்டாமுத்தூர் : தொண்டாமுத்தூர் அரங்கநாதர் கோவிலில், நேற்று புரட்டாசி மாத சிறப்பு பூஜை வெகுசிறப்பாக நடந்தது.புரட்டாசி மாதம் நேற்று (செப்.,17ல்) துவங்கியதால், அதிகாலை முதலே, பக்தர்கள் பெருமாள் கோவில்களுக்கு சென்று வழிபாடு நடத்தினர்.

தொண்டாமுத்தூரில், 325 ஆண்டுகள் பழமையான அரங்கநாதர் கோவிலில், அதிகாலை 4:30 மணிக்கு திருப்பள்ளியெழுச்சியும், காலை 6:00 மணிக்கு சிறப்பு பூஜையும், காலை, 9:00 மணிக்கு சிறப்பு அபிஷேகமும் நடந்தது.

பகல், 12:00 மணிக்கு உச்சிகால பூஜையும், மாலை, 6:00 மணிக்கு 11வது நாள் மண்டல பூஜையும், 7:30 மணிக்கு பஜனையும் நடந்தன. திரளான பக்தர்கள் சுவாமியை தரிசித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !