உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / புதுச்சேரி சொர்ணபைரவர் கோவிலில் அஷ்டமி பூஜை

புதுச்சேரி சொர்ணபைரவர் கோவிலில் அஷ்டமி பூஜை

புதுச்சேரி: இடையார்பாளையம் சொர்ணபைரவர் கோவிலில் அஸ்டமி ஹோம பூஜை நடந்தது.
புதுச்சேரி- கடலூர் சாலை இடையார்பாளையம் நாணமேடு சப்தகிரி நகரில் அமைந்துள்ள சொர்ணபைரவர் கோவிலில் வளர்பிறை அஷ்டமி ஹோம பூஜை  மாலை 4 மணிக்கு நடந்தது.

இதையொட்டி, 16 செல்வங்களை கொடுக்கும் சொர்ண பைரவர் ஹோமம், பைரவருக்கு அபிஷேகம், அலங்காரம், சிறப்பு தீபாராதனை நடந்தது. தொடர்ந்து பக்தர்களுக்கும், பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !