வடக்கு ஈஸ்வரர் கோயிலில் 1008 திருவிளக்கு பூஜை
ADDED :2574 days ago
திருவாடானை: திருவாடானை அருகே தளிர்மருங்கூர் கிராமத்தில் உள்ள உலகநாயகி சமேத வடக்கு ஈஸ்வரர் கோயிலில் 1008 திருவிளக்கு பூஜை நடந்தது. தளிர்மருங்கூர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த பெண்கள் விளக்கேற்றி சுவாமியை வணங்கினர். பழமையான இக் கோயிலை புதுப்பிக்கும் விதமாக நடந்த இந்த பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.