பழநி கோயிலில் பிரசாத விற்பனை உரிம ஏலம் மூன்றாவது முறை ஒத்திவைப்பு
ADDED :2577 days ago
பழநி: பழநி முருகன் கோயில் பிரசாத ஸ்டால், விற்பனை உரிமம் மூன்றாவது முறையாக ஒத்தி வைக்கப்பட்டது.பழநி முருகன் மலைக்கோயிலில் பிரசாத ஸ்டால் நடத்த தனியாருக்கு உரிமம் வழங்கப்படுகிறது. பஞ்சாமிர்தம் தவிர லட்டு, முறுக்கு, அதிரசம், புளியோரை, பொங்கல், விபூதி, குங்குமம் உள்ளிட்டவையும் விற்கப்படுகிறது.2016ல் ரூ.3.96 கோடிக்கு ஏலம் போன உரிமம் 2017ல் ரூ. 3.60 கோடிக்கு தான் போனது. இந்த ஆண்டு இருமுறை ஏலம் நடத்தப்பட்டும் கேட்க யாரும் வராததால் ஒத்திவைக்கப்பட்டது. மீண்டும் நேற்று முன்தினம் (செப்.,20ல்) அறிவிப்பு செய்தும், தொகை அதிகம் எனக்கருதி யாரும் ஏலம் கேட்க வரவில்லை.