கரூர் வெங்கடரமண சுவாமி கோவில் தேரோட்டம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
ADDED :2669 days ago
கரூர்: தான்தோன்றிமலை கல்யாண வெங்கடரமண சுவாமி கோவிலில், புரட்டாசி விழா தேரோட்டம் நடந்தது. பிரசித்தி பெற்ற கல்யாண வெங்கடரமண சுவாமி கோவில், கரூர் அருகே தான்தோன்றிமலையில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் புரட்டாசி மாதத்தில், தேரோட்ட விழா விமரிசையாக கொண்டாடப்படுகிறது. நடப்பாண்டு, கடந்த, 13ல், கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. 19ல், திருக்கல்யாண உற்சவம் நடந்தது.
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று காலை (செப்., 21) நடந்தது. போக்கு வரத்து துறை அமைச்சர் விஜய பாஸ்கர், வடம் பிடித்து தேரோட்டத்தை துவக்கி வைத்தபின், ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேர் இழுத்தனர். பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவையொட்டி, கரூர் பஸ் ஸ்டாண்டில் இருந்து, தான்தோன்றிமலைக்கு, சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.