உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஈரோடு கஸ்தூரி அரங்கநாதர் கோவில் தேரோட்டம்

ஈரோடு கஸ்தூரி அரங்கநாதர் கோவில் தேரோட்டம்

ஈரோடு: கோட்டை கஸ்தூரி அரங்கநாதர் கோவிலில், வெகு விமரிசையாக, தேரோட்டம் நடந்தது. ஈரோடு, கோட்டை கஸ்தூரி அரங்கநாதர் கோவில் தேர்த்திருவிழா, கடந்த, தொடங்கியது. முக்கிய நிகழ்வான தேரோட்டம் நேற்று(செப்.,21ல்) நடந்தது. மலர் சரங்களால் அலங்கரிக்கப் பட்ட தேரில், ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக கஸ்தூரி அரங்கநாதர் எழுந்தருள, ஏராளமான பக்தர்கள் இழுத்து சென்றனர். ஈஸ்வரன் கோவில் வீதி, மணிக்கூண்டு, பன்னீர் செல்வம் பார்க், பிரப்ரோடு, காமராஜர் வீதி வழியாக, மீண்டும் கோவிலை சென்றடைந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !