உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவள்ளூர் தீர்த்தீஸ்வரர் கோவிலில் பவித்ர உற்சவம்

திருவள்ளூர் தீர்த்தீஸ்வரர் கோவிலில் பவித்ர உற்சவம்

திருவள்ளூர்: திருவள்ளூர், தீர்த்தீஸ்வரர் கோவிலில், இந்த ஆண்டுக்கான பவித்ர உற்சவம், 20ம் தேதி, யாக பூஜையுடன் துவங்கியது. ஐந்து நாட்களும், தினமும், காலை 8:00 மணிக்கும், மாலை 6:00 மணிக்கும், யாக பூஜையும், பவித்ர சமர்ப்பணம், விசேஷ ஹோமம்  நடக்கிறது. இன்று,மாலை, 6:00 மணிக்கு, நடராஜர் அபிஷேகம் நடக்கிறது. நாளை, 24ம் தேதி, காலை, 8:00 மணிக்கு, யாகபூஜை சமர்ப்பணம் முடிந்து, இரவு, 9:00 மணிக்கு, மகா பூர்ணாஹூதியுடன் பவித்ர உற்சவம் நிறைவடைகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !