பாகூர் மூலநாதர் சுவாமி கோவிலில் சனி பிரதோஷ வழிபாடு
ADDED :2652 days ago
பாகூர் பாகூர் மூலநாதர் சுவாமி கோவிலில், சனி பிரதோஷ வழிபாடு நேற்று நடந்தது. பாகூரில் 1400 ஆண்டுகள் பழமைவாய்ந்த வேதாம்பிகை சமேத மூலநாதர் சுவாமி கோவிலில் சனிப்பிரதோஷ வழிபாடு நேற்று நடந்தது. காலை 6.00 மணிக்கு மூலநாதர், வேதாம்பிகை, முருகர், பாலகணபதி உள்ளிட்ட சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷகம் நடந்தது. இதனை தொடர்ந்து, மாலை 4.30 மணிக்கு சனிப்பிரதோஷ வழிபாடு நடந்தது. இதில், நந்தி பெருமானுக்கு, பால், தயிர், தேன் சந்தனம், பன்னீர் உள்ளிட்டவற்றால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை நடந்தது.