உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பழநியில் போக்குவரத்து நெரிசல் கிரிவலம் வரும்பக்தர்கள் சிரமம்

பழநியில் போக்குவரத்து நெரிசல் கிரிவலம் வரும்பக்தர்கள் சிரமம்

பழநி:பொதுவிடுமுறைநாட்கள், விழாக்காலங்களில் பழநி அடிவாரம், கிரிவீதி உள்ளிட்ட பகுதிகளில் நினைத்த இடத்தில் வாகனங்களை நிறுத்துவதால் போக்குவரத்து நெரிசலில் சிக்கி பக்தர்கள் சிரமப்படுகின்றனர்.

பழநி மலைக்கோயிலுக்கு விழாக்காலங்கள் மட்டுமின்றி சனி, ஞாயிறு, கார்த்திகை, சுபமுகூர் த்த நாட்களில் ஏராளமான வாகனங்கள் வருகின்றன. அவ்வாறு வரும் வாகனங்களை நிறுத்து வதற்காக கிழக்கு கிரிவீதியில் இலவச வாகன நிறுத்துமிடம், தனியார் வாகனநிறுத்தும் இடங்களும்உள்ளன.

ஆனால் போதிய வழிகாட்டுதல் இன்றி போக்குவரத்து மிகுந்த அடிவாரம் அருள்ஜோதிவீதி, அய்யம்புள்ளிவீதி, பூங்காரோடு, திருஆவினன்குடி கோயில் அருகே, சரவணப்பொய்கை, நகராட்சி ரவுண்டானா மற்றும் கிரிவீதியில் தடைசெய்யப்பட்டுள்ள இடங்களில் வாகனங் களை நிறுத்துகின்றனர். இதனால் கிரிவலம் வரும் பக்தர்கள் பாதிக்கப்படுகின்றனர். போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

இவ்விஷயத்தில் போலீசாரின் நடவடிக்கை பெயரளவில் மட்டுமே உள்ளது. கண்டபடி நிறுத்தப்படும் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட எஸ்.பி., சக்திவேல் உத்தரவிட வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !