அவலூர்பேட்டையில் கிருஷ்ண ஜெயந்தி
ADDED :2936 days ago
அவலூர்பேட்டை: அவலூர்பேட்டையில் கிருஷ்ண ஜெயந்தி விழா நடந்தது. அவலூர்பேட்டை வேணுகோபால் சுவாமி பஜனை மடத்தில் கிருஷ்ண ஜெயந்தி மற்றும் புரட்டாசி முதல் சனிக்கிழமையை முன்னிட்டு நேற்று முன்தினம் (செப்., 22ல்) சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை, சிறப்பு அலங்காரம் நடந்தது.
இரவு உறியடி உற்சவம் மற்றும் வழுக்கு மரம் ஏறுதல், கோலாட்டம் மற்றும் பஜனை குழுவினரிடன் கிருஷ்ணர் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா நடைபெற்றது.