உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தங்கத்திலான கணபதி சிலை திருவனந்தபுரத்தில் பிரதிஷ்டை

தங்கத்திலான கணபதி சிலை திருவனந்தபுரத்தில் பிரதிஷ்டை

திருவனந்தபுரம்:பல ஆண்டுகளாக, பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய தங்கத்தை கொண்டு கணபதி சிலை உரு வாக்கப்பட்டு, பழவங்காடி கோவிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டது. கேரளா, திருவனந்தபுரம் பழவங்காடி பகுதியில், பிரசித்திப் பெற்ற மகா கணபதி கோவில் உள்ளது. இக்கோவிலில், பல ஆண்டுகளாக பக்தர்கள் காணிக் கையாக வழங்கிய தங்கத்தை கொண்டு, மூலவர் கணபதி சிலை உருவாக்க முடிவு செய்யப்பட்டது. இச்சிலை நேற்று முன்தினம் காலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. ஒன்றரை அடி உயரம் கொண்ட சிலையை பிரதிஷ்டை செய்யும் நிகழ்ச்சியில், திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !