உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்ரீவில்லிபுத்தூர் வைத்தியநாதசுவாமி கோயிலில், திருமுறை பதிக விளக்க கூட்டம்

ஸ்ரீவில்லிபுத்தூர் வைத்தியநாதசுவாமி கோயிலில், திருமுறை பதிக விளக்க கூட்டம்

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் மடவார் வளாகம் வைத்தியநாதசுவாமி கோயிலில், குருவருள் திருமுறை மன்றத்தின் சார்பில் பன்னிரு திருமுறை பதிக விளக்க கூட்டம் நடந்தது. பூமிநாதன் வரவேற்றார். திருவருள் பாடல்களை குருவம்மாள் பாடினார். செந்தில் நாயகம் பதிக விளக்கமளித்தார். பொன்னாயிரசாமி குடும்பத்தினர் ஏற்று போற்றினர். அமைப்பாளர் கோவிந்தன் மற்றும் பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !