உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோபுரங்களைப் பற்றிய சில முக்கியச் செய்திகள்

கோபுரங்களைப் பற்றிய சில முக்கியச் செய்திகள்

திருப்பணிமாலை - திருப்பணி விபரம் நூலில் கண்டபடி




கிழக்கு கோபுரம் மாறவர்ம சுந்தர பாண்டியனால் கட்டப்பட்டது. காலம் 1210-1238. இரண்டிற்கும் இடைப்பட்ட காலம்


தெற்கு கோபுரம் சிலாமலைச் செவ்வந்தி மூர்த்தி செட்டியாரால் கட்டப்பட்டது. காலம் : 16ஆம் நூற்றறாண்டு 1559அஈ

மேற்கு கோபுரம்
குறிப்பாக ஒருவரால் மட்டும் கட்டப்பட்டது என்றில்லாமல் பல பாண்டிய மன்னர்களால் தொடர்ந்து கட்டப்பட்டது.
காலம் 1315 - 1347 அஈ

வேம்பத்தூரார் கோபுரம்
அம்மன் சன்னதியின் நுழைவு கோபுரம் வேம்பத்தூர் ஆனந்தத் தாண்டவ நம்பி. காலம் 1227அஈ

சுவாமி சன்னதி கோபுரம்
குலசேகர பாண்டியன் 1168 அஈ

கோபுர நாயக கோபுரம்
வசுவப்பன், காலம் - 1372 அஈ

பலக கோபுரம் மல்லப்பன், காலம் - 1374 அஈ

கடக கோபுரம் அம்மன் சன்னதி நேர்பின்புறம், காலம் -  1570 அஈ

சின்ன மொட்டைக் கோபுரம் செவ்வந்தி  வெள்ளையப்பச் செட்டியார் காலம் - 1560 அஈ

தெற்கு கோபுரமும், திருமலை செவ்வந்தி மூர்த்தி செட்டியார், நடுக்கட்டுக்கோபுரமும்  காலம் - 1559 அஈ

குறிப்புகள்:

1. கிழக்குக் கோபுரம் : மிக அரிதான பழமை வேலைப்பாடுகளுடன் கூடியது.

2. கடக - பலக கோபுரங்கள் : 14ஆம் நூற்றாண்டு காலத்தியது. நுழைவாயில் நிரந்தரமாக அடைக்கப்பட்டது. இதில் பலக கோபுரம் முஸ்லீம் படையெடுப்பில் அதிக சேதத்திற்குள்ளான தாகும்

3. மொட்டைக் கோபுரம்: சிவாச்சாயார்களுக்காக மட்டும் உபயோகத்தில் உள்ளது. சைவ சமயக் குரவர்கள், சமயத்தலைவர்கள் ஆகியோர் வரும் வழியாகவும் இருந்து வந்தது. சிவாச்சாரியர்களின் நிரந்தர குடியிருப்பு வடக்கு பக்கத்தில் இருந்ததால் அவர்கள் வந்து போவதற்காகவும் உபயோகத்தில் உள்ளது. வடக்கில் பக்தர்கள் வடக்கிலிருந்து தெற்கு நோக்கி இறைவழிபாட்டிற்கு வருவது கூடாது என்ற சம்பிரதாயக் காரணமும் இருந்திருக்கலாம்.

4. கிழக்கு கோபுரம் : விஜய நகர சொக்கநாதர் மன்னர் காலத்தில் ஒரு பணியாள் கோபுரத்திலிருந்து கீழே குதித்து உயிர்விட்டதால் அவ்வாயிலையும் உபயோகிக்காது இருந்துள்ளனர். என்பது வழக்கில் உள்ள செய்தி

5. கோபுர நாயக கோபுரம் : சுவாமி சன்னதி நுழைவுவாயில் கோபுரத்திற்கும் கிழக்கு ராஜ கோபுரத்திற்கும் நடுவே அமைந்த இக்கோபுரத்தின் வழியே வெளியேறுவதும் இல்லை. சுவாமி தரிசனம் முடிந்து கம்பத்தடி மண்டப விசேஷ சிற்ப தரிசனங்கள் முடித்த பின் பிரதக்ஷிணமாக வலம் வந்து நவக்கிரஹ சன்னிதியினையும் சுற்றி வந்த பின் நூற்றுக்கால் மண்டபம் தற்போதைய தியான மண்டபம் பார்த்த பின் அக்னி வீரபத்திரர், அகோர வீரபத்திரர், ஊத்துவ தாண்டவர், காளி என முக்கிய தெய்வங்களை வணங்கியும், தூணில் ஆஞ்சநேயர் தரிசனம் வலம் என்றும், நால்வர் மண்டபம் தரிசனம் என்றும், யாவும் முடித்த உடன் கொடிமர வணக்கம் செய்து அவ்வழி தொடர்ந்து கோபுர நாயக கோபுரம் கடக்காமல் மீண்டும் சுவாமி கோவில் இரண்டாம் பிரஹாரம் முக்குறுணி விநாயகர் சன்னதி வழியாக தெற்குநோக்கி வந்து நடுக்கட்டுக் கோபுரம் கடந்து அன்னை மீனாக்ஷி கொடி மர தரிசனமும் முடித்து பின் தெற்கு கோபுரம் வழியாகவோ அல்லது முதலில் நுழைந்து வந்த அம்மன் சன்னிதி அஷ்ட லட்சுமி மண்டபம் வழியாகவோ வெளிவருவதையே மக்கள் பெரிதும் விரும்பும் சூழல் இருக்கிறது. இதற்கு வேறு சாஸ்திர காரணம் இருப்பதாகத் தெரியவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !