உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வழிவிடு முருகன் கோயில் கும்பாபிஷேகம்

வழிவிடு முருகன் கோயில் கும்பாபிஷேகம்

ஸ்ரீவில்லிபுத்தூர் :ஸ்ரீவில்லிபுத்தூர் நத்தம்பட்டியில் வழிவிடு முருகன் கோயிலில் கும்பாபிஷேகம் நடந்தது. இதையொட்டி முதல்நாள் ஹோமங்கள் நடந்தன. நேற்று காலை சிவாச்சாரியார் கணபதி குருக்கள் தலைமையில் விநாயகர், முருகன் சன்னதி கோபுர கலசங்களில், புனித நீர் தெளிக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. விழாவில் ஏ.டி.ஜி.பி., ராதாகிருஷ்ணன், ஓய்வு பெற்ற தமிழ்நாடு தடவியல் இயக்குனர் விஜயக்குமார், இந்து அறநிலையத்துறை ஆய்வாளர் முருகப்பன் உள்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் சுற்று வட்டாரத்தை சேர்ந்த கிராமத்தினர் திரளாக கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர்கள் முத்துராமலிங்கம், ஜெயராஜ் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !