ஆத்தூர் துர்க்கை அம்மனுக்கு மஹா சண்டி யாகம்
ADDED :2614 days ago
ஆத்தூர்: ஆத்தூர், கோட்டை காயநிர்மலேஸ்வரர் கோவிலில் பவுர்ணமியை முன்னிட்டு, நேற்று(செப்., 24ல்) மாலை, 6:00 மணிக்கு மஹா மங்கள சண்டி ஹோமம் நடந்தது.
இரவு, 7:00 மணிக்கு வெள்ளி கவச அலங்காரத்தில் துர்க்கை அம்மன், பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ஆத்தூர், நரசிங்கபுரம், கெங்கவல்லி சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த, ஏராளமான பக்தர்கள் வழிபாடு செய்தனர். அதேபோல், ஆத்தூர், கோட்டை மதுரகாளியம்மன், கடைவீதி அங்காளபரமேஸ்வரி அம்மன், கைலாசநாதர் கோவில் துர்க்கை அம்மன், பெரியமாரியம்மன், திரவுபதி அம்மன், ஆறகளூர் அம்பாயிரம்மன் கோவில்களில் பவுர்ணமி பூஜை நடந்தது.