ஈரோடு அரங்கநாதர் கோவிலில் தெப்போற்சவம்
ADDED :2681 days ago
ஈரோடு: தேர் திருவிழா தெப்போற்சவ நிகழ்ச்சியில், திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். ஈரோடு, கோட்டை கஸ்தூரி அரங்கநாதர் கோவில் தேர்த்திருவிழா, ??ம் நாள் நிகழ்ச்சியில், தெப்போற்சவம் நடந்தது. முன்னதாக கோவில் விழா மண்டபத்தில், சேஷ வாகனத்தில் ஸ்ரீதேவி பூதேவி, சமேதராக நம்பெருமாள் எழுந்தருளினார். கோவிலை மூன்று முறை வலம் வந்து, தெப்பக்குளத்துக்கு பக்தர்கள் புடைசூழ வந்து, தெப்பகுள முன் மேடையில் நிலை கொண்டார். அதை தொடர்ந்து, தாமரை மலர்களால் நிரப்பட்ட தெப்பக்குளத்தில், வேத மந்திரங்கள் முழங்க பட்டாச்சாரியார்கள், தீபாராதனை காட்ட, தெப்பகுளத்தின் நான்கு திசைகளிலும், நம்பெருமாள் வலம் வந்தார். இரவு, 12:00 மணி வரை நடந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.