உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சேலம் கோட்டை பெருமாள் கோவிலில் மாவட்ட நீதிபதி ஆய்வு

சேலம் கோட்டை பெருமாள் கோவிலில் மாவட்ட நீதிபதி ஆய்வு

சேலம்: கோட்டை அழகிரிநாதர் கோவிலில், மாவட்ட முதன்மை நீதிபதி ஆய்வு நடத்தினார். சென்னை உயர்நீதிமன்ற அறிவுறுத்தலின் அடிப்படையில், தமிழகத்தில் உள்ள முக்கிய கோவில்களில், நீதிபதிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

சேலத்தில் பிரசித்தி பெற்ற, கோட்டை அழகிரிநாதர் கோவிலில், நேற்று (செப்., 24ல்) சேலம் மாவட்ட முதன்மை நீதிபதி மோகன்ராஜ், குற்றவியல் முதன்மை நீதிபதி சிவஞானம், முதன்மை உரிமையியல் நீதிமன்ற நீதிபதி தங்கமணி கணேசன் ஆகியோர் ஆய்வு நடத்தினர். இதுகுறித்து, அவர்கள் கூறியதாவது: சேலம் மாவட்டத்தில் இதுவரை, ஐந்து கோவில்களில் ஆய்வு நடத்தப் பட்டு, குறைபாடுகள் குறித்து ஆய்வு நடத்தியுள்ளோம். கோட்டை அழகிரிநாதர் கோவிலில், வாகனங்கள் நிறுத்துவதற்கான இடம் பற்றாக்குறையாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !