உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சென்னை குறளகம் காதி கிராப்டில் கொலு கண்காட்சி

சென்னை குறளகம் காதி கிராப்டில் கொலு கண்காட்சி

சென்னை : நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு, சென்னை குறளகத்தில், கொலு பொம்மை கண்காட்சி களைகட்டிஉள்ளது.

கிராமப்புற கைவினைஞர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையிலும், அவர்களின் உற்பத்தியை சந்தைப்படுத்தவும், கதர் கிராமத்தொழில் வாரியம்,பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.ஒவ்வொரு ஆண்டும், சென்னை, குறளகத்தில் உள்ள கதர் அங்காடி வளாகத்தில், கொலு பொம்மை கண்காட்சியை நடத்தி வருகிறது.

இந்த ஆண்டிற்கான கண்காட்சி, 19ம் தேதி துவங்கியது.இதில், மண்பாண்ட கூட்டுறவு அலகு களில் தயாராகும் மண் மற்றும் மர பொம்மைகள், பீங்கான், காகித, உலோக பொம்மைகள் இடம்பெற்றுள்ளன. மேற்கு வங்கம்,கர்நாடகம், புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் தயாராகும் பொம்மை களும் இடம் பெற்று உள்ளன.

அக்., 31ம் தேதி வரை நடத்தப்படும் இக்கண்காட்சிக்கு, தினமும் காலை, 10:00 மணி முதல், இரவு, 8:00 மணி வரை பார்வை யாளர்கள் அனுமதிக்கப்படுவர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !