உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உடுமலை பரிதாப நிலையில் பழங்கால கோவில்

உடுமலை பரிதாப நிலையில் பழங்கால கோவில்

உடுமலை: பழங்கால கோவிலை புதுப்பிக்க, இந்து அற நிலையத்துறை எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால், கிராம மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.

உடுமலை அருகே பெரியபட்டியில், ரங்கநாதர் கோவில் உள்ளது. கோவிலில், சுயம்புவாக பெருமாள் எழுந்தருளிய சிறப்பு பெற்ற இக்கோவில், பல நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த தாகும்.போதிய பராமரிப்பு இல்லாததால், கருவறை கோபுரம் உட்பட சுவர் உள்ளிட்ட பகுதிகள் பொலிவிழந்து, சுண்ணாம்பு கூட பூசப்படாமல் உள்ளது.

குறிப்பாக, கோவிலின், சிறப்பம்சமான சிங்க முக கிணறு பராமரிப்பு இல்லாமல், பரிதாப நிலையில் உள்ளது. கிணறு மூடப்பட்ட நிலையில், படிக்கட்டுகள், மது அருந்தும் இடமாக மாறியுள்ளது.

முறையான சுற்றுச்சுவர் இல்லாததால், குடிமகன்கள் அத்துமீறுவது தொடர்கதையாக உள்ளது. பழமையான இந்த அமைப்பு முழுமையாக சிதிலமடையும் அபாயத்தில் உள்ளது.
தங்கள் கிராமத்தின் வரலாற்று ஆவணமாக உள்ள கோவிலை, இந்து அறநிலையத்துறை புதுப்பிக்க வேண்டும் என்ற கோரிக்கை கிடப்பில் போடப்பட்டுள்ளதால், அப்பகுதி மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !