உத்தரகோசமங்கை செல்லப்ப சுவாமி சித்தரின் ஜீவ சமாதி பவுர்ணமி பூஜை
ADDED :2614 days ago
உத்தரகோசமங்கை: எக்ககுடியில் தஞ்சாக்கூர் சூட்டுக்கோல் செல்லப்ப சுவாமி சித்தரின் ஜீவ சமாதி உள்ளது. புரட்டாசி பவுர்ணமியை முன்னிட்டு சிவலிங்கத்திற்கு அபிஷேக, ஆராதனைகள் செய்யப்பட்டு, மலர் அர்ச்சனை நடந்தது.
பெண்கள் நெய்தீபம் ஏற்றி வழிபாடு செய்தனர். பக்தர்கள் சிவநாமாவளி, சிவபுராணம், சித்தர் பாடல்களை பாடினர். அன்னதானம் நடந்தது. ஏற்பாடுகளை மாதாந்திர பவுர்ணமி வழிபாட்டுக் குழுவினர் செய்திருந்தனர்.