உள்ளூர் செய்திகள்

ஆனிமாத விழா

ஊஞ்சல் திருவிழா: ஆனித்திருமஞ்சன விழா எனவும் இதனைக் கூறுவர். மூல நட்சத்திரத்ததுடன் பூர்த்தி பெறுவதாகும். பத்து நாட்கள் நடைபெறும் இவ்விழா ரக்ஷா பந்தனம் - காப்பு கட்டி துவங்குவதாகும்.  அதிர வீசியாடுவான் அவ்வாடல் நாயகன் நடராஜப்பெருமான் கால் மாறி ஆடியவர், ஐந்து நடராஜ மூர்த்திகளாய் புறப்பாடாகி கஜ சம்ஹார வாகனத்தில் ஆடி வீதிகளில் திரு உலா நிகழும் இவ்விழா உத்திர நட்சத்திரத்தில் முடிவடையும்ஆடி மாத விழா முளைக்கொட்டு விழாஅன்னை ஸ்ரீ மீனாக்ஷி க்கு நடைபெறும் தனி விழா  ரக்ஷா பந்தனம்....... காப்பு கட்டி விழா துவங்கும் ஆடிகேட்டை நட்சத்திரத்தோடு பூர்த்தியாகும் பத்து நாள் விழாவில் சைத்யோபசாரக் காட்சிகளும், புஷ்ப விமானக் காட்சிகளுடன் அன்னை ஸ்ரீ மீனாக்ஷி குதிரை வாகனத்தில் திருஉலா செய்வார். திருக்கோவில் ஆடிவீதிப் பிரஹாரத்தில் விழாக் கொண்டாடப்படும். இதனை விவசாயப் பெருங்குடி மக்கள் விவசாயத் துவக்கமாகக் கொண்டாடுவதற்கெனக் கூறுவர். பொற்றாமரைக் குளத்தில் தீர்த்த வாரி நிகழும்.‘ஆவணி மூல விழா”  சுவாமிக் கொடிமரத்தில் ஐந்து கொடிகளை ஏற்றித்துவங்கும் 18 நாள் விழாவாகும். அவிட்ட நட்சத்திரத்தோடு பூர்த்தியாகும். தீர்த்தவாரி வைகை நதியில் நிகழும். முதல் 6 நாள் சந்திரசேகரர் உற்சவமாகவும், தொடர்ந்து ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேஸ்வரர் ஆவணி மூல வீதிகளில் திருஉலாக் காட்சியருளுவர். பிட்டுக்கு மண் சுமந்த படலம். திருவிளையாடல் விளக்க அடிப்படையாகக் கொண்டது. திருப்பரங்குன்றத்தில் இருந்து ஸ்ரீ முருகப்பெருமான் மயில் வாகனத்தில் எழுந்தருள, திருவாதவூரில் இருந்து மாணிக்க வாசகரும் வந்தருள்வார். திருவிளையாடற் பெருமைகளை விளக்கியும், அதன் பல படலங்களில் உள்ள முக்கிய நிகழ்ச்சிகளைப் பாடலாகப் பாடியும், நடித்தும் பாவனையாக வெளிப்படுத்தும் அற்புத விழாவாகும்.  திருக்கோயிற் சம்பந்தப்பட்ட ஊழியர்கள் அனைவரையும் கவுரவிக்கும் வகையில் அவரவர் பணித்தகுதிக்கு ஏற்ப பல்லக்கு, யானை ஏற்றி மேளதாளத்துடன் அழைத்து வருவார்கள். இது ஒருவகை ஒருமைப்பாட்டை உணர்த்தும் உயர்ந்த நிகழ்வாகும். இதனை தெய்வீக விழாவில் சேர்த்து விளக்கும் வகையில், தொன்று தொட்டு பாண்டியர் காலம் முதல் தொடர்ந்து நிகழ்த்தப்பட்டு வருகிறது என கூறப்படுகிறது.  ஆவணி மூல விழாவின் ஏழாம் திருநாளன்று  ஸ்ரீ சோம சுந்தரேஸ்வரருக்கு முடிசூட்டும் விழா நடைபெறும். இறையனார் தன்னைத்தானே பூஜித்து வழிபட்ட சிவ பூஜை விழாவும் ஆகும். இறை இறையினை வழிபட்ட தலம் மதுரை மத்தியபுரி நடுநின்றவூர் என வழங்கப்படும் இம்மையில் நன்மை தருவார் கோவில். பத்து நாள் விழாக்களின்நடைபெறும் திருவிளையாடற் புராண நிகழ்வுகள் ... படல எண்கள்முதல் நாள் விழாவில் - கருங்குருவிக்கு அருள் செய்தது ..... 47வது படலம்இரண்டாம் நாள் விழாவில் - நாரைக்கு முக்தியளித்தது ..... 48வது படலம்மூன்றாம் நாள் விழாவில் - மாணிக்கம் விற்றது ..... 17வது படலம்நான்காம் நாள் விழாவில் - தருமிக்கு பொற்கிழி அளித்தது ..... 52வது படலம்ஐந்தாம் நாள் விழாவில் - உலவாக்கோட்டை அருளியது ..... 38வது படலம்ஆறாம் நாள் விழாவில் - பக்தர் பாடலுக்கு அருளியது ..... 42வது படலம்ஏழாம் நாள் விழாவில் - வளையல் விற்றது ..... 32வது படலம்எட்டாம் நாள் விழாவில் - நரிகளைப் பரிகளாக்கியது ..... 59வது படலம்ஒன்பதாம் நாள் விழாவில் - பிட்டுக்கு மண் சுமந்து பிரம்படி பட்டது ..... 61வது படலம்பத்தாம் நாள் நிறைவு விழாவில் - விறகு விற்றது


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !