உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பேரையூர் அருகே சாப்டூரில் சிலைகள் கண்டெடுப்பு

பேரையூர் அருகே சாப்டூரில் சிலைகள் கண்டெடுப்பு

பேரையூர்: பேரையூர் அருகே சாப்டூர் வனபகுதிக்கு உட்பட்ட அய்யங்கோவில் பிட் காப்புகாடு பகுதியில் வனவர் முத்து கணேசன் தலைமையில் காவலர் நாராயணன் மற்றும் கவலர்கள் ரோந்து பணியில் இருந்தனர். அப்போது கேட்பாரற்று கிடந்த 600 கிராம் எடை கொண்ட பெருமாள், 100 கிராம் எடை கொண்ட சரஸ்வதி சிலைகளை தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் இளமுருகனிடம் ஒப்படைத்தனர். எந்த உலோகத்தால் செய்யப்பட்டது என ஆய்வு நடந்து வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !