ராமநாதபுரம் சேதுபதி நகர் பகுதியில் உள்ள சந்தன மாரியம்மன் கோயில் திருவிழா
ADDED :2672 days ago
ராமநாதபுரம்: ராமநாதபுரம் சேதுபதி நகர் பகுதியில் உள்ள சந்தன மாரியம்மன் கோயில் திருவிழா நேற்று (செப்., 25ல்) துவங்கியது. முதல் நாளில் கலெக்டர் அலுவலகம் அருகில் உள்ள மல்லம்மாள் கோயிலில் இருந்து பக்தர்கள் பால்குடம், 12 நீள திரிசூலம், வேல், அலகுகள் குத்தி ஊர்வலமாக பாரதிநகர் வழியாக சேதுபதி நகர் கோயில் வந்தடைந்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தி அம்மனை தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை அப்பகுதி மக்களும், நிர்வாக கமிட்டியினரும் செய்திருந்தனர்.