பழநியில் ‛ரோப்கார் சேவை பாதிப்பு
ADDED :2613 days ago
பழநி: பழநியில் காற்றுடன் மழை பெய்ததால், மின்வினியோகம், ரோப்கார் சேவை பாதிக்கப்பட்டது. பழநி பகுதியில் சிலநாட்களாக பகலில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வெப்ப சலனத்தால் மக்கள் அவதிப்பட்டனர். இந்நிலையில் நேற்று மாலை 4:30 மணிக்குமேல் காற்றுடன் மிதமான மழையும், வரதமாநதி, பாலாறு அணை, கொடைக்கானல் ரோடு பகுதிகளில் கன மழையும் பெய்தது. நீண்ட நாட்களுக்குபின் மக்கள் குளிர்ந்தகாற்றை அனுபவித்தனர். பலத்த காற்று, மழைபெய்த நேரங்களில் ரோப்கார் நிறுத்தப்பட்டு, மழை, காற்று குறைந்தபின் மீண்டும் இயக்கப்பட்டது. சில இடங்களில் மின்தடை ஏற்பட்டதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர்.