அருணாசலேஸ்வரர் கோவில் தேர்களை அதிகாரிகள் ஆய்வு
ADDED :2571 days ago
திருவண்ணாமலை: அருணாசலேஸ்வரர் கோவில் தேர்களை, அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், 10 நாட்கள் நடக்கும் கார்த்திகை தீபத் திருவிழா, வரும் நவ., 14ல் துவங்குகிறது. அதே மாதம், 20ல் தேரோட்டம் நடக்கிறது.
இதில், பவனி வர உள்ள, ஐந்து தேர்களை, பழுது பார்க்கும் பணிகள், நேற்று (செப்., 26ல்) துவங்கின. இதற்காக, திருவண்ணாமலை மாவட்ட பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் மதிவாணன் தலைமையில், 10 பேர் கொண்ட குழுவினர், நேற்று (செப்., 26ல்) காலை, 10:00 மணிக்கு அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு வந்தனர்.
அங்கு, அண்ணாமலையார், அம்மன், விநாயகர், முருகர், சண்டிகேஸ்வரர் தேர்களை ஆய்வு செய்தனர். தேர்களில் உள்ள பழுதுகளை குறிப்பெடுத்துக் கொண்ட அதிகாரிகள், அவற்றை சீரமைக்குமாறு, தொழிலாளர்களுக்கு அறிவுறுத்தினர்.