உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவள்ளூர் வீரராகவ பெருமாள் இன்று (செப்., 27ல்) ஸ்ரீபெரும்புதூர் வருகை

திருவள்ளூர் வீரராகவ பெருமாள் இன்று (செப்., 27ல்) ஸ்ரீபெரும்புதூர் வருகை

ஸ்ரீபெரும்புதூர்: வேதாந்த தேசிகனின், 750வது திரு அவதார விழாவை முன்னிட்டு, திருவள் ளூரில் இருந்து வீரராகவப் பெருமாள், ஸ்ரீபெரும்புதூர் எழுந்தருளும் நிகழ்வு இன்று (செப்., 27ல்) நடைபெறுகிறது.

ஸ்ரீபெரும்புதூரில் வேதாந்த தேசிகன் கோவில் அமைந்துள்ளது. புரட்டாசி மாதம் திரு வோணம் நட்சத்திரம், வேதாந்த தேசிகனின் அவதார தினம். இந்தாண்டு வேதாந்த தேசிகனின், 750 ஆண்டு திரு அவதார மஹோர்சவம் கொண்டாடப்படுகிறது.இந்த விழாவை முன்னிட்டு, திருவள்ளூர் வீரராகவ பெருமாள் ஸ்ரீபெரும்புதூர் எழுந்தருளும் நிகழ்வு இன்று (செப்., 27ல்) நடைபெறுகிறது.

கும்ப மரியாதை : திருவள்ளூரில் இருந்து, இரண்டு நாட்களுக்கு முன் புறப்பட்ட வீரராகவ பெருமாள், மணவாள நகர், செங்காடு, மண்ணூர், தொடுகாடு, ஆயக்கொளத்தூர் வழியாக, இன்று (செப்., 27ல்) காலை ஸ்ரீபெரும்புதூர் வந்தடைகிறார்.

ஸ்ரீபெரும்புதூர் ஊர் எல்லைக்கு வீரராகவபெருமான் வருவதற்கு முன்னதாகவே, அவரை எதிர்கொள்ளும் வேதாந்த தேசிகன், பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்கிறார்.அதன் பின், ஸ்ரீபெரும்புதூர் வீதிகளில் புறப்பாடு கண்டருளி, காலை, 7:00 மணிக்கு, ஸ்ரீபெரும்புதூர் ஸ்ரீ அஹோபில மடத்திற்கு, வீரராகவ பெருமாள் எழுந்தருளுவார்.

பக்தர்களின் பொது தரிசனத்திற்கு பின், காலை, 9:30 மணிக்கு ஸ்ரீபெரும்புதூர் மாட வீதிகளில் திருவாபரண திருமேனியுடன், வேதபாராயணம் மற்றும் தேசிக ஸ்தோத்ரங்கள் பாராயணங் களுடன் புறப்பாடு கண்டருளி, 11:00 மணிக்கு, வேதாந்த தேசிகர் கோவிலை சென்றடைவார்.

அங்கு பகல், 1:00 மணிக்கு, வீரராகவப் பெருமாளுக்கு விசேஷ திருமஞ்ஜனம் நடைபெறும்.
இரவு, 7:30 மணிக்கு, திருப்பாவை சாற்றுமறை நடைபெறும். 9.30 மணிக்கு, பெரிய மாட வீதிகளில் ராமானுஜ நூற்றாந்தாதி மற்றும் யஜீர், சாம வேத பாராயணங்களும், விசேஷ நாதஸ்வர, வாண வேடிக்கையுடன் கூடிய புறப்பாடும் நடைபெறும்.

(செப்., 29ல்) சனிக்கிழமை அதிகாலை, 2:30 மணிக்கு, திருவாய் மொழி சாற்றுமறை நடை பெறும். அன்று காலை, 4:00 மணிக்கு புறப்பாடு கண்டருளி, ஸ்ரீபெரும்புதூர் ஊர் எல்லையில், வீரராகவப் பெருமாளுக்கு பிரியாவிடை நடைபெறும்.

750 பழங்கள் அதன் பின், வீரராகவப் பெருமாள் திருவள்ளூர் கோவிலை சென்றடைவார். வேதாந்த தேசிகனின், 750ம் ஆண்டு திருஅவதார விழாவை முன்னிட்டு அனைத்து வகையான பழங்களையும்,750 எண்ணிக்கையில் வைத்து வழிபடும் நிகழ்வும் இன்று (செப்., 27ல்) நடைபெற உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !