உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆர்.கே.பேட்டை அடுத்த, வங்கனூரில் நவராத்திரியில் அரங்கேற்ற சிறுமியர் கோலாட்ட பயிற்சி

ஆர்.கே.பேட்டை அடுத்த, வங்கனூரில் நவராத்திரியில் அரங்கேற்ற சிறுமியர் கோலாட்ட பயிற்சி

ஆர்.கே.பேட்டை: காலாண்டு தேர்வுகள் முடிவடைந்து, ஓய்வாக பொழுதை கழித்துவரும் மாணவியர், நவராத்திரி உற்சவத்தில் அரங்கேற்று வதற்காக, கோலாட்ட பயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

பள்ளி மாணவர்களுக்கு, காலாண்டு தேர்வுகள், சனிக்கிழமையுடன் முடிவடைந்தன. இதையடுத்து, தற்போது விடுமுறையில் ஓய்வாக பொழுதை கழித்து வருகின்றனர்.சில மாணவர்கள், அறிவியல் படைப்புகளை தயாரித்து, சோதிக்கும் முயற்சியில் ஈடுப்டடுள்ளனர். மேலும் சிலர், பல்வேறு விளையாட்டு பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

ஆர்.கே.பேட்டை அடுத்த, வங்கனூர் கிராமத்தைச் சேர்ந்த சிறுமியர், செவிண்டியம்மன் கோவில் வளாகத்தில், கோலாட்ட பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். தோழிகளே, இவர்களுக்கு குருவாகவும் செயல்பட்டு வருகின்றனர்.கோலாட்ட பயிற்சியில் ஈடுபட்டுள்ள மாணவியர், நவராத்திரி உற்சவத்தின் போது, தங்களின் ஆட்டத்தை அரங்கேற்றம் செய்ய திட்டமிட்டுஉள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !