உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சேரானூர் மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்

சேரானூர் மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்

சேரானூர்: மகா மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம் நடந்தது.செஞ்சி அடுத்த சேரானூர் கிராமத்தில் புதிதாக கட்டப்பட்ட விநாயகர், மகா மாரியம்மன், பாலமுருகன் கோவில் மகா கும்பாபிஷேகம் நேற்று (செப்., 30ல்) நடந்தது.அதனையொட்டி நேற்று முன்தினம் (செப்., 29ல்) காலை மகா கணபதி ஹோமம், லட்சுமி ஹோமமும், கலச பிரதிஷ்டை, யாகசாலை பிரவேசம், முதல் கால யாகசாலை பூஜை நடந்தது.

இரவு சிலை பிரதிஷ்டை, அஷ்டபந்தனம் சாற்றுதல், யாகசாலை மகா தீபாராதனை நடந்தது. நேற்று (செப்., 30ல்) காலை 7:00 மணிக்கு இரண்டாம் கால பூஜை, நாடி சந்தானம், மகா பூர்ணாஹூதியும், 9.20 மணிக்கு கலச புறப்பாடாகி காலை 9:40 மணிக்கு மகா கும்பாபிஷேகமும் நடந்தது. தொடர்ந்து மகா அபிஷேகம், மகா தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !