கொரவனந்தல் சொக்கநாதர் கோவிலில் திருப்பணிகள்
ADDED :2626 days ago
கொரவனந்தல்: சொக்கநாதர் கோவிலில் திருப்பணிகள் துவக்கத்தை முன்னிட்டு சிறப்பு ஹோமம் செய்தனர்.செஞ்சி அடுத்த கொரவனந்தல் கிராமத்தில் பாண்டிய மன்னர்கள் காலத்தில் கட்டிய சொக்கநாதர் கோவில் அழிவின் விளிம்பில் உள்ளது. இந்த கோவிலை புதுப்பிக்க கிராம மக்கள் முடிவு செய்துள்ளனர். இதற்கான திருப்பணிகள் துவக்க விழா நேற்று (செப்.,30ல்)நடந்தது. அதனையொட்டி சொக்கநாதருக்கு கலச பிரதிஷ்டை செய்து வடபுத்தூர் சைவநெறி திருத்தொண்டர் இளஞ்செழியன் அடிகள் தலைமையில் வேள்வி நடந்தது.இதில் திருப்பணிக்குழுவினர் மற்றும் கிராம பொது மக்கள் கலந்து கொண்டனர்.