மாமல்லபுரம் ஸ்தலசயன பெருமாள் கோவிலில் ரவிசங்கர்
ADDED :2576 days ago
மாமல்லபுரம்: வாழும் கலை அமைப்பின் நிறுவன தலைவர், ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர், மாமல்லபுரம் ஸ்தலசயன பெருமாள் கோவிலில் வழிபட்டார். மாமல்லபுரம் அடுத்த, பட்டிபுலத்தில் உள்ள, பரத நாட்டிய கலைஞர், பத்மா சுப்பிரமணியத்தின், இளங்கோ அரங்க விழாவில் பங்கேற்க, நேற்று முன்தினம் (செப்., 29ல்) வந்த ரவிசங்கர், ஸ்தலசயன பெருமாள் கோவிலில், சுவாமியரை தரிசித்து வழிபட்டார்.அர்ச்சகர்கள், கோவில் வரலாற்றை, அவருக்கு விளக்கினர். கோவில் கும்பாபிஷேகம், திருக்குளம் பராமரிப்பு குறித்து, அவரிடம் வலியுறுத்தப்பட்டன. அதைத்தொடர்ந்து, பல்லவ கலைச்சின்னங்களை பார்வையிட்டார்.