உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பிரசாதம் இது பிரமாதம்: பாஸந்தி

பிரசாதம் இது பிரமாதம்: பாஸந்தி

என்ன தேவை?

பால்    -    1 லிட்டர்
சர்க்கரை    -    200 கிராம்
பிஸ்தா பருப்பு    -    5 கிராம்
சாரப் பருப்பு    -    5 கிராம்
ஏலப்பொடி    -    1/4 டீஸ்பூன்
குங்குமப்பூ    -    சிறிதளவு
பச்சைக்கற்பூரம்    -    சிறிதளவு

எப்படி செய்வது: பாலை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். கிளற வேண்டாம். பால் கொதித்து ஆடை படிந்து வரும். கெட்டியான ஆடையாக வந்ததும் ஒதுக்கிப் பாத்திரத்தோடு ஒட்டினாற்போல பக்கவாட்டில் சேர்க்கவும். பால் வற்றி சுமார் 250 மி.லி. வந்ததும், சர்க்கரையை சேர்த்து, கொதித்ததும் இறக்கவும்.
பின், ஏலப்பொடி, குங்குமப்பூ, பச்சைக்கற்பூரம் சேர்த்து கலக்கவும். நன்கு ஆறியபின் ஓரத்தில் ஒதுக்கி வைத்த பாலாடையை தோசைக்கரண்டியால் எடுத்து கலந்து வைக்கவும். சாரைப்பருப்பு, பிஸ்தா பருப்பை பொடியாக்கி தூவவும். சுவையான பாஸந்தி தயாராகி விடும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !