குரு கோவில் வாகனங்களுக்கு பார்க்கிங் கட்டணம் இல்லை
ADDED :2640 days ago
குரு கோவில்: குரு பெயர்ச்சி விழாவிற்கு, தட்சிணாமூர்த்தி கோவிலுக்கு வரும் வாகனங் களுக்கு, பார்க்கிங் கட்டணம் கிடையாது என, வட்டார வளர்ச்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. வாலாஜாபாத் ஒன்றியம், கோவிந்தவாடி ஊராட்சியில், தட்சிணாமூர்த்தி திருக்கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு வரும் வாகனங்களுக்கு, ஊராட்சி நிர்வாகம், வாகன நிறுத்த கட்டணம் வசூலித்து வந்தது. நடப்பாண்டிற்கான ஏலம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், குரு பெயர்ச்சி விழா, நாளை நடைபெற உள்ளது.இந்த விழாவிற்கு, இக்கோவிலு க்கு வரும் வாகனங்களுக்கான கட்டணத்தை, ஊராட்சி நிர்வாகம் வசூலிக்காது என, வட்டார வளர்ச்சி சிவகலைசெல்வன்தெரிவித்துள்ளார்.
வாகனங்களுக்கு, கிராம மக்கள் கட்டணம் வசூலித்தால், ஊராட்சி நிர்வாகம் பொறுப்பேற்காது எனவும் தெரிவித்துள்ளார்.