சபரிமலையில் பெண்களுக்கு அனுமதி ரத்து செய்ய வழிபாடு
ADDED :2584 days ago
சபரிமலை: சபரிமலையில் பெண்களுக்கு அனுமதி என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பை ரத்துசெய்ய வலியுறுத்தி, பழநியில் இந்து முன்னணியினர் அடிப்பிரதட்னை செய்து வழிபட்டனர். திண்டுக்கல் மாவட்ட பொதுச்செயலாளர் ஜெகன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் ராஜசேகர், பொருளாளர் அருண் முன்னிலை வகித்தனர். சபரிமலையில் பெண்களுக்கு அனுமதி என்ற தீர்ப்பு இந்துக்கள் மனதை புண்படுத்தியுள்ளது. அதனை ரத்து செய்ய உச்சநீதிமன்றம் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என வலியுறுத்தினர். திருஆவினன்குடிகோயிலில் இருந்து அடிப்பிரதட்சனை செய்து, ஐயப்பன் படத்துடன் கிரிவலம் வந்தனர். தீர்ப்பை ரத்து செய்ய வேண்டி பாதவிநாயகர் கோயிலில் தேங்காய் உடைத்து வழிப்பட்டனர். பா.ஜ., மாவட்டசெயற்குழு உறுப்பினர் ராஜா உட்பட பலர் பங்கேற்றனர்.---