உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / புதுச்சேரியில் சனீஸ்வர பகவான் கோவிலில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்

புதுச்சேரியில் சனீஸ்வர பகவான் கோவிலில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்

புதுச்சேரி: மொரட்டாண்டி சனீஸ்வர பகவான் கோவிலில், நிறுவனர் தினத்தை முன்னிட்டு, ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. லலிதாம்பிகா வேத சிவாதம டிரஸ்ட் சார்பில், கோவில் வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில், ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. 100 பேருக்கு புடவை, ஆண்களுக்கு வேட்டி, பள்ளி குழந்தைகளுக்கு நோட்டு புத்தகம், பேனா, புத்தகப்பை உள்ளிட்டவை வழங்கப்பட்டது. 300 பேருக்கு அன்னதானமும், அரிசி தானமும் வழங்கப்பட்டது. கோவில் நிறுவனர் சிதம்பர குருக்கள் வழங்கினார். ஏற்பாடுகளை, கீதா சங்கர குருக்கள், டாக்டர் கீதாராம் குருக்கள், ஆசிரியர் ரமேஷ் குருக்கள், கீதா மாலனி, ஸ்ரீவித்யா, மகேஸ்வரி மற்றும் டிரஸ்ட் உறுப்பினர்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !