நெட்டப்பாக்கம் ஏம்பலத்தில் அம்பலத்தாடி அப்பார் ஜீவசமாதியில் குருபூஜை
                              ADDED :2582 days ago 
                            
                          
                           நெட்டப்பாக்கம்: ஏம்பலம் அம்பலத்தாடி அப்பார் ஜீவசமாதியில் குருபூஜை விழா நடந்தது. ஏம்பலம் கிராமத்தில் ஜீவசமாதி அடைந்த அம்பலத்தாடி அப்பாருக்கு,அம்பலத்தாடும் அப்பார் திருமடத்தில் நேற்று முன்தினம் (ஆக்., 1ல்) காலை 11 மணிக்கு குருபூஜை விழா நடந்தது. விழாவையொட்டி, அப்பர் சமாதிக்குஅபிஷேக ஆராதனைகள், மகேஷ்வர பூஜை நடந்தது.இந்த பூஜையில் அமைச்சர் கந்தசாமி மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.