ஆத்தூர் விநாயகர் கோவிலில் உழவாரப்பணி
ADDED :2638 days ago
ஆத்தூர்: காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, ஆத்தூர், வெள்ளை விநாயகர் கோவிலில், ஆர்.எஸ். எஸ்., சேவா பாரதி, பாரதி அறக்கட்டளை, ஜெயபாரத் பள்ளி ஆசிரியர்கள், மாணவ, மாணவியர் பலர், உழவாரப்பணி மேற்கொண்டனர். குப்பை, களைச்செடிகளை அகற்றினர். பா.ஜ., மாநில செயற்குழு உறுப்பினர் ஜெயஆனந்த், அ.தி.மு.க., நகர செயலாளர் மோகன் உள்பட பலர் பங்கேற்றனர்.