உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காஞ்சிபுரம் உலக நன்மைக்காக நவக்கிரக யாகம்

காஞ்சிபுரம் உலக நன்மைக்காக நவக்கிரக யாகம்

காஞ்சிபுரம்: குரு பகவான், துலாம் ராசியில் இருந்து, விருச்சிக ராசிக்கு, இன்று (அக்., 4ல்) பிரவேசிக்கிறார். இதையொட்டி, உலக நன்மைக்காக, சித்தர்கள் சிறப்பு தின விழா கூட்டமைப்பு சார்பில், காஞ்சிபுரம் பரமசிவம் தெருவில் உள்ள, காஞ்சிபுரம் தொண்டை மண்டல ஆதின மடத்தில், குருபெயர்ச்சி மற்றும் நவக்கிரக யாகம், நாளை நடைபெறுகிறது.

பரிகார ராசிகளான, மேஷம், மிதுனம், சிம்மம், கன்னி, விருச்சிகம், தனுசு மற்றும் கும்ப ராசியினர், யாகத்தில் பங்கேற்று, பரிகார சங்கல்பம் செய்து கொள்ளலாம் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !