வடுக்குப்பம் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில் கருட சேவை உற்சவம்
ADDED :2628 days ago
வடுக்குப்பம்: பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில் கருட சேவை உற்சவம் வரும் 6ம் தேதி நடக்கிறது.நெட்டப்பாக்கம் அடுத்துள்ள வடுக்குப்பம் கிராமத்தில் அமைந்துள்ள பத்மாவதி தாயார் சமேத பிரசன்ன வெங்கடசே பெருமாள் கோவிலில் புரட்டாசி மூன்றாம் சனிக்கிழமையை முன்னிட்டு, 6ம் தேதி காலை 7.00 மணிக்கு சிறப்பு திருமஞ்சனம் நடக்கிறது. காலை, 10.00 மணிக்கு தீபாராதனை, இரவு 8.00 மணிக்கு கருட சேவை உற்சவம் நடக்கிறது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.