சுற்றி வரக் கூடாத சாமி
ADDED :5115 days ago
சிவனடியார்களில் எப்போதும் தியானத்தில் ஆழ்ந்திருப்பவர் சண்டிகேஸ்வரர். சிவன் கோயிலுக்குச் சென்று, இவரை தரிசிக்காமல் திரும்பினால், கோயிலுக்கு சென்ற பலன் கிடைக்காது என்பது ஐதீகம். வலக்கையின் நடு விரல்கள் மூன்றையும் இடக்கையால் தட்டுவது போல கையை வைத்து இவரை வழிபட வேண்டும். ஆனால், சத்தம் வரக்கூடாது. சிவதியானம் கலைந்து விடும் என்பதால் இவர் சந்நிதியில் ஒலி எழுப்புவதோ, நூலைப் பிய்த்து போடுவதோ கூடாது. இவரைச் சுற்றி வந்து வழிபடவும் கூடாது. நிர்மாலயதீர்த்தம் என்னும் அபிஷேகம் விழும் கோமுகியைத் தாண்டக் கூடாது என்பதால் இவரது சந்நிதியைச் சுற்றும் வழக்கம் இல்லை. இவர் நாயன்மார்களில் ஒருவராகத் திகழ்கிறார்.