பழநி கோயில்களில் குருபெயர்ச்சி
ADDED :2720 days ago
பழநி: குருபெயர்ச்சியை முன்னிட்டு, பழநி கோயில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. குருபகவான் துலாம் ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கு பெயர்ச்சி ஆனதை முன்னிட்டு, பழநி திருஆவினன் குடியில் தட்சிணாமூர்த்திக்கு சிறப்புஅபிஷேகம், வெள்ளிக்கவச அலங்காரம் செய்து தீபாராத னை நடந்தது. அக்னி, மகாலட்சுமி, பூமாதேவி, காமதேனு, சூரியன் ஆகிய சுவாமிகளுக்கு வெள்ளிக்கவச அலங்காரம்செய்தனர்.
பெரியநாயகியம்மன்கோயில், பெரியாவுடையார்கோயில் உள்ளிட்ட கோயில்களிலும் தட்சிணாமூர்த்திக்கு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. பழநி மதனபுரம் அண்ணாமலை யார்,உண்ணாமுலைநாயகி 18 சித்தர்கள் பீடத்தில் குருபெயர்ச்சி யாகபூஜை நடந்தது. கோயில் நவக்கிரக சன்னதியில் வியாழ பகவானுக்கு மஞ்சள் வஸ்திரம், சுண்டல் மாலை அணிவித்து, தீபம்ஏற்றி பக்தர்கள் பரிகாரபூஜைகள் செய்தனர்.