உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சொக்கநாதன்புத்துார் கோயில் விழா துவக்கம்

சொக்கநாதன்புத்துார் கோயில் விழா துவக்கம்

ராஜபாளையம்: ராஜபாளையம் அருகே சொக்கநாதன்புத்துார் மேலுார் துரைச்சாமிபுரம்   முப்புடாதி அம்மன், வடகாசி அம்மன் கோயில் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது .இதை முன்னிட்டு நேற்று அதிகாலை 2:00 மணிக்கு கணபதி ஹோமம்  நடந்தது.   காலை 4:00 மணி முதல் அம்மன் சிறப்பு அலங்காரத்தில்  காட்சியளித்தார். கொடிமரத்திற்கு விசேஷ பூஜை செய்து, 16 வகை அபிேஷகங்கள் செய்ய மங்கள வாத்தியங்கள் முழங்க 5:00 மணிக்கு கொடியேற்றம் நடந்தது. இதை முன்னிட்டு அன்னதானம் ,இரவு 8:00 மணிக்கு அம்மன் வீதி உலா மற்றும், தெம்மாங்கு இசை நிகழ்ச்சி நடைபெற்றது.  விழாவின் முக்கிய நிகழ்வான பூக்குழி அக். 12 ல் நடைபெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !