தேவதானப்பட்டி,ஜெயமங்கலம் கவுமழை மாரியம்மன் கோயிலில் புரட்டாசி பொங்கல் விழா
ADDED :2660 days ago
தேவதானப்பட்டி: ஜெயமங்கலம் கவுமழை மாரியம்மன் கோயில் புரட்டாசி பொங்கல் விழாவில் காவடி எடுத்து பக்தர்கள் நேர்த்திக் கடன் செலுத்தினர்.ஜெயமங்கலம் கவுமழை மாரியம்மன் கோயில் கிரா மப்புறங்களில் மிகவும் சிறப்பு பெற்று விளங்குகிறது.
இங்கு புரட்டாசி பொங்கல் விழா நடக்கிறது. சில்வார்பட்டி, நாகம்பட்டி, நடுப்பட்டி, பொம்மி நாயக்கன்பட்டி, நல்லகருப்பன்பட்டி கிராமங்களை சேர்ந்த மக்கள் அம்மனை தரிசனம் செய்து செல்கின்றனர். பெண்கள் மாவிளக்கு எடுத்தனர். ஏராளமானோர் அக்னி சட்டி, காவடி எடுத்து தங்களின் நேர்த்திக்கடன் செலுத்தினர். பொங்கல் வைத்து கிடா வெட்டப்பட்டது.