உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சென்னை அறநிலையத் துறை பணிகளில்,கோவில் புனரமைப்பு விண்ணப்பம் வரவேற்பு

சென்னை அறநிலையத் துறை பணிகளில்,கோவில் புனரமைப்பு விண்ணப்பம் வரவேற்பு

சென்னை:அறநிலையத் துறை பணிகளில், தன்னார்வலர்களை பயன்படுத்த, பல்துறை வல்லுனர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். தகுதியானோர், வரும், 15ம் தேதிக்குள் விண்ணப் பிக்க வேண்டும். அறநிலையத் துறை சார்பில் மேற்கொள்ளப்படும், கோவில் புனரமைப்பு, மேம்பாடு உள்ளிட்ட பணிகளில், தகுதியும், அனுபவமும் உடைய, தன்னார்வலர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

இதற்கு, தகுதியானோர் பட்டியலை, அறநிலையத் துறை தயாரிக்க உள்ளது. ஆர்வமும், தகுதியும் உள்ள, கோவில் புனரமைப்பு முதல், கைத்தொழில் வரையிலான வல்லுனர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்கள் மற்றும் விபரங்களை, அறநிலையத்துறையின் தீதீதீ.tணடணூஞிஞு.ணிணூஞ் என்ற,  இணையதளத்தில் இருந்து, பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.தங்கள் துறைகளின் அனுபவத்துடன், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, ஆணையர், இந்து சமய அறநிலையத் துறை, 119, உத்தமர் காந்தி சாலை, சென்னை - -34 என்ற முகவரிக்கு, வரும், 15க்குள் அனுப்பி வைக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !