உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தசரூப லட்சுமி நாராயணர் கோவிலில் கருட சேவை

தசரூப லட்சுமி நாராயணர் கோவிலில் கருட சேவை

திருத்ணி: தசரூப லட்சுமி நாராயண சுவாமி கோவிலில், நேற்று, புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமையையொட்டி, கருட சேவை நிகழ்ச்சி நடந்தது.திருவாலங்காடு ஒன்றியம், ராமாபுரம் கிராமத்தில், தசரூப லட்சுமி நாராயண சுவாமி பெருமாள் கோவில் உள்ளது.  இக்கோவிலில், நேற்று, மூன்றாவது புரட்டாசி சனிக்கிழமையையொட்டி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது. தொடர்ந்து, காலை, 10:00 மணிக்கு, உற்சவர் பெருமாள் கருட வாகனத்தில் எழுந்தருளி வீதியுலா வந்து பக்தர்களுக்கு  அருள்பாலித்தார். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகி விஜயகுமார் மற்றும் விழாக் குழுவினர் செய்திருந்தனர். அதே போல், புரட்டாசி சனிக்கிழமையொட்டி, திருத்தணி நந்தி ஆற்றின் கரையோரம் உள்ள விஜயராகவ பெருமாள், நெமிலி வைகுண்ட பெருமாள்,  குன்னத்துார் பெருமாள், திருத்தணி ராதா ருக்மணி உட்பட, அனைத்து பெருமாள் மற்றும் பஜனை கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !